
தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன்
தற்போது தெலுங்கில் பான் இந்திய படமாக தயாராகும் "ஸ்பை" எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகனாக நிகில் சித்தார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும்.
இதனைத் தொடர்ந்து "வலிமை" படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களை தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிசியாகிவிட்ட ஐஸ்வர்யா மேனன் தமிழ் பட வாய்ப்புகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!