
லியோ - காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு
மார் 23, 2023
Advertisement
மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் "லியோ". திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தயாரிப்பாளர் லலித் தெரிவித்திருந்தார். நேற்று தனது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்ததால் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினார் விஜய். இந்நிலையில் நேற்று லியோ படத்திற்கான காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றதால் இன்று படக்குழுவினர்கள் அனைவரும் தனி விமானத்தில் சென்னை திரும்புகின்றனர். இதையடுத்து சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!