
காசேதான் கடவுளடா பழைய படம் மாதிரி இருக்காது: சிவா சொல்கிறார்
படம் குறித்து சிவா கூறியதாவது: "காசேதான் கடவுளடா" எவராலும் திரும்ப எடுக்க முடியாத கிளாசிக் காமெடி படம். என்றாலும் அதை நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். அதனால் அந்த படத்தோடு இதனை ஒப்பிடாமல் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். அந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியான காமெடி அப்போது பெரிதாக ரசிக்கப்பட்டது. அதனை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றுவது சவால். அதனை இயக்குனர் கண்ணன் திறம்பட கையாண்டிருக்கிறார். இந்த படத்தை மக்கள் வரவேற்றால் இதுபோன்ற பல கிளாசிக் படங்கள் மீண்டும் வரும். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!