
இராவண கோட்டத்தில் கருவேலங்காட்டு உண்மை சம்பவம்
விழாவில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் படம் பற்றி பேசியதாவது : இந்த படம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு அரசியலை பேசும் படம். கொடூரமான வெயிலில் கருவேலங்காட்டிலேயே படமாக்கினோம். 1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. சாந்தனு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். இந்த படம் அவரது கேரியரில் முக்கியமானதான இருக்கும்.
நன்றாக நடிக்க தெரிந்த நடிகை வேண்டும் என்பற்காக ஆனந்தியை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். படத்தின் பட்ஜெட் நிர்ணயித்ததை விட அதிகமானது. அதையும் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இராவணன் என்ற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறது என்றார்கள். அதை தாண்டி இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!