
தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு
இந்த நிலையில் அந்த படத்தை இந்திய அளவில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற ஜீ நிறுவனம் அதற்கான முன்தொகையாக 6 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் வசம் செலுத்தி இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவில் வசூலாகாத நிலையில், கணக்கு வழக்குகளை ஒப்படைத்து தாங்கள் செலுத்திய ஆறு கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கடந்த ஒன்றரை வருடங்களாக கடிதம் மூலமாகவு,ம் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு வந்தனராம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வராததால் தற்போது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!