
தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்
மார் 20, 2023
Advertisement
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் மாமன்னன் படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ், அந்த படத்தை முடித்ததும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறாராம். ஏற்கனவே தனுசும் - மாரி செல்வராஜூம் இணைந்த கர்ணன் படம் மெகா ஹிட்டடித்த நிலையில் இந்த புதிய படத்தை பான் - இந்தியா படமாக இயக்கப் போவதாக கூறப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அதையடுத்து தனது ஐம்பதாவது படத்தை இயக்கி அதில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்து மீண்டும் தயாரிப்பிலும் இறங்க போகிறாராம் தனுஷ்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!