
பத்து தல - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை
24 மணி நேரங்களில் இந்த டிரைலர் 14 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிம்பு நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் முதல் முறையாக புதிய சாதனையைப் படைத்துள்ளது. 24 மணி நேரங்களில் "வாரிசு" டிரைலர் 32 மில்லியன், "பீஸ்ட், துணிவு" டிரைலர்கள் 30 மில்லியன், "பிகில்" டிரைலர் 19.5 மில்லியன், "வலிமை" டிரைலர் 17 மில்லியன் என முன்னணியில் உள்ளன. இப்போது "பத்து தல" டிரைலர் 14 மில்லியன்களைப் பெற்று டாப் 5ல் இடம் பிடித்துள்ளது.
இரண்டு வாரம் முன்பு வெளியான "பத்து தல" டீசர் 12 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்ற நிலையில் இப்போது டிரைலருக்கு அதை விட அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!