
வாத்தி படத்திற்கு இன்னொரு கிளைமேக்ஸா?
மார் 17, 2023
Advertisement
நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் "வாத்தி". சமீபத்தில் இப்படம் வெளியாகி வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 25 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டனர். இக்காட்சி படத்தின் மற்றொன்று கிளைமேக்ஸ் காட்சியாக அமைந்துள்ளது. இந்த காட்சி போல் வேறு நீக்கப்பட்ட காட்சிகள் இப்படத்தில் இருந்து வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!