கண்ணை நம்பாதே எனது கேரியரில் முக்கியமான படம் : ஆத்மிகா
Advertisement
Advertisement
கண்ணை நம்பாதே எனது கேரியரில் முக்கியமான படம் : ஆத்மிகா
மார் 15, 2023
அ நிறம் | அளவு
Advertisement
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கண்ணை நம்பாதே. இப்படத்தை மு.மாறன் இயக்கி இருக்கிறார். வருகிற 17ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து ஆத்மிகா கூறுகையில், கண்ணை நம்பாதே படம் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை நான் நடிக்காத ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விடுவேன். இந்த படம் எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமையப் போகிறது. இந்த கதையை இயக்குனர் சொன்னபோது கதையோடு முழுமையாக ஒன்றி விட்டேன். அந்த அளவுக்கு ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருந்தது. கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் உடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. அவர் நிறைய சவால்களுக்கு மத்தியில் இந்த படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்கிறார் ஆத்மிகா.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!