
சமந்தாவின் இதயத்தை வென்ற இயக்குனர்
காளிதாசர் எழுதிய "சாகுந்தலம்" என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை படக்குழுவினருடன் பார்த்த சமந்தா அதுபற்றி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது : சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நமது காவியங்களில் ஒன்றான இந்தக் கதையை அழகாக எடுத்திருக்கிறீர்கள். இதன் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் குடும்பமாக நிச்சயம் மகிழ்வார்கள். குழந்தைகளும் இந்த மாய உலகத்தை ரசிக்கப் போகிறார்கள். இந்த அற்புதமான பயணத்துக்காக, தில் ராஜுக்கும் நீலிமாவுக்கும் (தயாரிப்பாளர்கள்) நன்றி. இந்தப் படம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும். என்று எழுதியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!