
தேர்வு நேரம், புதிய படங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா ?
இந்த வாரம் மார்ச் 17ம் தேதி “கண்ணை நம்பாதே, ராஜா மகள், குடிமகான், கோஸ்டி, டி3” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றில் "கண்ணை நம்பாதே, கோஸ்டி" ஆகிய இரண்டு படங்கள் தான் "ஸ்டார் வேல்யூ" உள்ள படங்கள். "கண்ணை நம்பாதே" படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, பிரசன்னா, ஸ்ரீகாந்த் இணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். "கோஸ்டி" படத்தில் காஜல் அகர்வால் முதன்மைக் கதாநாயகியாக நடிக்க யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட் படங்களான "குடிமகான்" படத்தில் விஜய் சிவன், சாந்தினி, "ராஜா மகள்" படத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலீனா, "டி 3" படத்தில் பிரஜின், வித்யா பிரதீப் நடித்துள்ளனர். இவை தவிர கன்னடத்திலிருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள "கப்ஜா" படமும் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!