
லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ்
தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சத், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இன்று(மார்ச் 14) இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காஷ்மீரில் "லியோ" படப்பிடிப்பில் இருக்கும் அவர் நேற்றிரவு நண்பர்களால் ஏற்பாடு செய்த பார்ட்டியில் பிறந்தநாள் கொண்டாடினார். அதில் விஜய், சஞ்சத் தத், திரிஷா மற்றும் லியோ படக்குழுவினருடன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மேலும் திரையுலகினர், ரசிகர்கள் பலரும் லோகேஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவரின் பிறந்தநாள் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!