மாவீரன் படத்தின் பிசினஸ் விபரம்
மார் 14, 2023
Advertisement
"மண்டேலா" படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "மாவீரன்". இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பை படம் எட்டியுள்ளது.
இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தனியார் டிவி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த உரிமை ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும், ஆடியோ உரிமையை சரிகம நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. தற்போது வரை இந்த படம் ரிலீசுக்கு முன்னரே ரூ.83 கோடி வரை பிஸ்னஸ் செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!