
ஆஸ்கர் விருது வென்ற த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்
இதற்கு முன்பு 1969ம் வருடம் இதே பிரிவில் "த அவுஸ் தட் ஆனந்தா பில்ட்" என்ற குறும்படமும், 1979ம் ஆண்டு "அன் என்கௌன்டர் வித் பேசஸ்" என்ற படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிட்டன. ஆனால், அவை விருதுகளை வெல்லவில்லை.
முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதிகளைப் பற்றிய கதையாக இந்த "த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்" என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது கதையுடன் அந்த தேசியப் பூங்காவில் ஆதரவற்று வந்த ரகு என்ற யானையை அவர்கள் வளர்ப்பது பற்றியும், பின் அது அவர்களை விட்டு செல்வது பற்றியும் ஒரு உணர்வுபூர்வமான படமாக அது அமைந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டு இந்த குறும்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!