
“சப்தம்” படத்தில் இணைந்த லைலா
இதில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி மேனன் நடிக்கும் நிலையில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருக்கிறார். லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. தமன் இசையமைக்கிறார்.
ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!