
ஹீரோயின் ஆனார் யு டியூப்பர் புவனேஸ்வரி
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஆர்.பிரபாகரன் தயாரிக்கிறார். எஸ். ஜே. அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். "காலங்களில் அவள் வசந்தம்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கவுஷிக் ராமும், யுடியூபர் ரவி விஜேவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி , குக்வித் கோமாளி புகழ், சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பிரஹத் முனியசாமியின் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் எஸ்ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில், "இது ஒரு ரொமான்டிக் காமெடியான, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது. அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!