
சார்பட்டா பரம்பரை 2 இசையமைக்கப் போவது யார்?
ஆனால், அந்த அறிவிப்பில் படத்தின் இசையமைப்பாளர் பெயர் எதுவும் இடம் பெறவில்லை. முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது பின்னணி இசையும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் "எஞ்சாமி" பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன், அறிவு இடையே சர்ச்சை ஏற்பட்டது. அதனால், பா ரஞ்சித் தனது அடுத்த படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைக்கவில்லை.
அதற்கடுத்து அவர் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு தென்மா இசையமைத்திருந்தார். தற்போது விக்ரம் நடிக்க இயக்கி வரும் "தங்கலான்" படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
"சார்பட்டா பரம்பரை 2" படத்தின் அறிவிப்பு வெளியானதுமே அதற்கு, இசையமைப்பாளர்கள் சாம் சிஎஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்தோஷ் நாராயணனும் பா.ரஞ்சித், ஆர்யா ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து, “வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை,” என பதிவிட்டுள்ளார். பகையை மறந்து இருவரும் மீண்டும் இணைந்து பணி புரிவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!