
அகிலன் - தனி வெற்றியை எதிர்பார்க்கும் ஜெயம் ரவி
அவர் தனி கதாநாயகனாக நடித்துள்ள "அகிலன்" படம் இந்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பு அவர் தனி கதாநாயகனாக நடித்த "பூமி" படம் 2021ல் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்பு 2019ல் அவர் நடித்து வெளிவந்த "கோமாளி" படம் பெரும் வெற்றியைப் பெற்றது. மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் தனி கதாநாயகன் படமாக "அகிலன்" வர உள்ளது.
ஜெயம் ரவி நடித்து 2015ல் வெளிவந்த "பூலோகம்" படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள படம்தான் "அகிலன்". இந்தப் படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வேறு எந்த முன்னணி நடிகரின் படமும் போட்டிக்கு இல்லாததால் "அகிலன்" படம் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் அனைவரையும் கவர வாய்ப்புண்டு.
மார்ச் 10ம் தேதி “ப்யூட்டி, இரும்பன், கொன்றால் பாவம், மெமரீஸ்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!