
இளம் நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்கும் கமல்ஹாசன்
சத்யராஜ் நடித்த "கடமை கண்ணியம் கட்டுப்பாடு", ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த "மகளிர் மட்டும்", மாதவன் நடித்த "நளதமயந்தி", விக்ரம் நடித்த "கடாரம் கொண்டான்" ஆகிய மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்துள்ளது. 40 வருடங்களில் 4 படங்கள்தான் மற்ற நடிகர்களின் படங்கள்.
ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அடுத்து சிம்பு நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவை தவிர இன்னும் சில இளம் நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம். அவை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!