
ஜூனியர் என்டிஆர் - ஆலியா பட்டுக்கு பார்சலில் பறந்து வரும் விருதுகள்
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக் விருதுகள் விழாவில் இந்த படத்திற்கு பல பிரிவுகளில் விருதுகள் கிடைத்தன. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டாலும் படத்தின் இன்னொரு நாயகனான ஜூனியர் என்டிஆர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்தப்படத்தின் வெற்றியில் ஜூனியர் என்டிஆர் புறக்கணிக்கப்பட்டு ராம்சரண் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார் என்பது போன்று ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட விருது வழங்கும் அமைப்பு, ஜூனியர் என்டிஆர் தன்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு மற்றும் தனது சகோதரர் மரணம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கான விருதை உரிய நேரத்தில் அவர் பெற்றுக்கொள்வார் என்றும் விளக்கம் அளித்து ரசிகர்களை சமாதானப்படுத்தியது.
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆருக்கும் படத்தின் கதாநாயகியாக நடித்த ஆலியா பட்டுக்கும் இந்த ஹாலிவுட் கிரிடிக் விருதுகள் வரும் வாரத்தில் அனுப்பப்பட இருக்கின்றன என்கிற தகவலை இந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளதுடன் அவர்கள் இருவருக்கான விருது டிராபிகளையும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!