
மீண்டும் நடிக்க வருகிறார் தனன்யா
டாக்டராக படித்துக் கொண்டிருந்த தனன்யா படிப்பை தொடர சென்று விட்டார். படித்து முடித்து டாக்டராகிவிட்ட தனன்யா அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் தற்போது தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். தனியாக போட்டோ ஷூட்டும் நடத்தி உள்ளார். கணவரின் அனுமதியோடு மீண்டும் தனன்யா நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க இருப்பதாகவும், ஹீரோயின் என்று இல்லாமல் மற்ற கேரக்டர்களில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!