
ரஜினியின் 170வது படம் அறிவிப்பு : இவர் தான் இயக்குனர்
லைகா நிறுவனத்திற்கு ரஜினி இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒன்று அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி சில மாதங்களுக்கு முன் பட பூஜையும் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தற்போது ரஜினி ஹீரோவாக நடிக்கும் பட அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரஜினியின் 170வது படமாக உருவாகும் இதை ‛ஜெயம் பீம்" படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகாவின் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். லைகா தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடிக்கும் 3வது படம் இதுவாகும்.
லைகா வெளியிட்ட செய்தியில், ‛‛சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்களுக்கு கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா பெருமை கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளுடன் 2024ல் மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம்"" என தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!