
4 மொழிகளில் தயாராகும் செவ்வாய்கிழமை
படத்தைப் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் பூபதி கூறியதாவது: "செவ்வாய்கிழமை" கான்செப்ட் அடிப்படையிலான படம். இது இந்திய சினிமாவில் இதுவரை முயற்சி செய்யப்படாத வகையைச் சேர்ந்தது. படத்தைப் பார்க்கும்போது தலைப்பின் பின்னணியில் உள்ள நியாயத்தை தெரிந்து கொள்ளலாம். கதையில் மொத்தம் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட இடம் கதையில் உண்டு. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பொருத்தமானது மற்றும் முக்கியமானது. இது பான் இந்தியா படமல்ல. பக்கா பான் சவுத் இந்தியன் படம். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார் "காந்தாரா" புகழ் பி.அஜனீஷ் லோக்நாத் இசை அமைக்கிறார். படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படுகிறது. 4 மொழியை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பார்கள். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!