
இளையராஜாவை சந்தித்த நாக சைதன்யா நெகிழ்ச்சி
இந்த நிலையில் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றுள்ளார். அவரை நாக சைதன்யா உள்ளிட்ட கஸ்டடி படக் குழுவினர் சந்தித்தனர். இது குறித்து நாக சைதன்யா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது கஸ்டடிக்கு அவரே இசையமைத்து இருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான். என எழுதியுள்ளார்.
நாக சைதன்யா நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் கஸ்டடி. ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!