
மோகன்லால் படத்தை இயக்க விரும்பும் அர்ஜூன்
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வந்த தெலுங்கு நடிகர் விஸ்வக் சென்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது புதிய கதாநாயகனை தேடிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். இந்த நிலையில் தனது மருமகன் முறையுள்ள கன்னட நடிகர் துருவா சார்ஜா நடிப்பில் வெளியாக இருக்கும் மார்ட்டின் என்கிற படத்திற்கு கதை எழுதியுள்ளார் அர்ஜுன். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அர்ஜுனும் கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி கேரளாவில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அர்ஜுன் பேசும்போது மோகன்லால் வைத்து ஒரு படம் இயக்குவதற்காக கதையை தயார் செய்து அதை அவரிடமும் கூறி விட்டேன் உடனடியாக அந்த படம் துவங்கப்படாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்தில் நிச்சயமாக மோகன்லால் படத்தை இயக்குவேன் என்று தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகி வெளியான ‛மரக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்" படத்தில் மோகன்லாலுடன் முதன்முறையாக அர்ஜூன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!