
பத்து நாட்களில் விஜய்யின் வாரிசுடு வசூலை முறியடித்த தனுஷின் சார்!
இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் தற்போது சார் படத்தை தயாரித்துள்ள சித்தாரா நிறுவனம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பத்து நாட்களில் சார் படம் 30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, விஜய்யின் வாரிசு தெலுங்கில் வசூலித்த மொத்த வசூலை 10 நாட்களில் தனுஷின் சார் படம் கடந்து சாதனை படைத்திருப்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி கூடிய சீக்கிரமே தனுஷின் இந்த வாத்தி படம் உலக அளவில் 100 கோடி வசூலை எட்டிப் பிடித்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!