
லியோ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் மேனன்
பிப் 27, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கவுதம் மேனன். அவர் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் "லியோ" படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் கவுதம். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. அப்படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார் கவுதம். இரண்டு தினங்களுக்கு முன்பு பிப்ரவரி 25ம் தேதியன்று கவுதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு "லியோ" படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!