
இலங்கை தமிழ் பெண்ணுடன் திருமணமா?: சிம்பு தரப்பு மறுப்பு
இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‛இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன்பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!