
13 வருடங்களை நிறைவு செய்த விண்ணைத் தாண்டி வருவாயா
90ஸ் கிட்ஸ்களின் அபிமான காதல் திரைப்படமாக மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் திரைப்படமாக இருந்து வருகிறது "விண்ணைத் தாண்டி வருவாயா". இந்தப் படத்திற்குப் பிறகுதான் சிலம்பரசனுக்கு தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களிடம் இருந்தும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.
இந்துப் பையன், கிறிஸ்துவப் பெண் என மதம் சம்பந்தப்பட்ட காதலாக இருந்தாலும் படத்தின் காதல் காட்சிகள், சிம்பு, த்ரிஷா ஆகியோரது நடிப்பு. இப்படத்தில் அறிமுகமாகி சிம்புவின் கேமரா நண்பராக நடித்த விடிவி கணேஷ், படத்தின் பாடல்கள், ஒளிப்பதிவு என பல விஷயங்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
கவுதம் மேனன், ஏஆர் ரகுமான் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம். அதற்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் கூட்டணி வைத்திருந்த கவுதம் முதல் முறையாக ரகுமானுடன் இணைந்து பாடல்களில் ஒரு புதிய அலை உருவாகக் காரணமாக இருந்தார்.
அப்படத்திற்குப் பிறகு அதை விட சிறந்த காதல் திரைப்படம் இந்த 13 வருடங்களில் இன்னும் வெளிவரவில்லை என தாராளமாகச் சொல்லலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!