பிரபாஸின் பிரம்மாண்டமான படத்தில் சந்தோஷ் நாராயணன்
பிப் 25, 2023
Advertisement
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தற்போது நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் ,தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் படம் "புராஜெக்ட் K ".இந்த படத்திற்கு மிக்கி ஜே மெயர் அசைமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் மிக்கி ஜே மெயர் இப்படத்தை விட்டு விலகிய நிலையில் இப்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் . சந்தோஷ் நாராயணன் உடன் பாலிவுட் பெண் இசையமைப்பாளர் ஒருவரும் இசை அமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!