
பூஜா ஹெக்டேவுக்காக புதிய கார்
தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கிவரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டேவை சந்தோஷப்படுத்த திரிவிக்ரம் புதிய கார் ஒன்றை படப்பிடிப்பு தளத்திற்கு வர வழைத்துள்ளார். பொதுவாக நடிகைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வர கார் ஏற்பாடு செய்யப்படும். தற்போது இந்த பட படப்பிடிப்பு வர இவருக்கு இந்த புதிய காரை ஏற்பாடு செய்துள்ளாராம் திரிவிக்ரம். இந்த செய்தி இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!