
ஹாரர் த்ரில்லர் படத்தில் லட்சுமி மேனன்
"றெக்க" படத்திற்கு பிறகு 5 ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த லட்சுமி மேனன் கடைசியாக "புலிக்குத்தி பாண்டி" என்ற படத்தில் நடித்தார் இந்த படம் தொலைக்காட்சியில் வெளியானது தற்போது அவர் யோகி பாபுவுடன் "மலை" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் லட்சுமி மேனன் "சப்தம்" என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஈரம், வல்லினம் ஆறாது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் தயாரித்து, இயக்குகிறார். ஆதி நாயகனாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!