
சந்திரமுகி 2வில் இணைந்த மகிமா நம்பியார்
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மகிமா நம்பியார் இணைந்துள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் மஹிமா நம்பியார் பகிர்ந்துள்ளார். அதில், "திறமை மிகுந்த அற்புதமான மனிதரான லாரன்ஸ் மாஸ்டருடன் பணிபுரிந்த அனுபவம் அற்புதமானது. இந்த சந்திரமுகி 2 படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று மஹிமா நம்பியார் ட்வீட் செய்துள்ளார்.
"சாட்டை" படத்தில் அறிமுகமான மகிமா நம்பியார், அதன் பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு, ஓ மை டாக், ஐங்கரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!