
மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் விபத்து - சில வினாடிகளில் உயிர் தப்பிய விஷால் உள்ளிட்ட படக்குழுவினர்
தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர். நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள பதிவில் , "மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் சில வினாடிகளில் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன். கடவுளுக்கு நன்றி" என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!