
சிவகார்த்திகேயனின் மாவீரன்: பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகிறது
இந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தை பக்ரீத் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் நான்கு நாட்கள் விடுமுறைகள் தினம் என்பதால் இந்த நாளில் அப்படத்தை வெளியிடுகிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது. மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் வெளியிடப்பட இருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது .
அதோடு சிவகார்த்திகேயனின் 22வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டும் விரைவில் வெளியாக இருப்பதாக சிவகார்த்திகேயனுக்கு 38வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!