
புது காதலருடன் ஏடாகூட புகைப்படங்களைப் பதிவிட்ட எமி ஜாக்சன்
எமி ஜாக்சன் இதற்கு முன்பு ஜார்ஜ் பனயட்டியோ என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயம் மட்டும் நடந்தது, ஆனால், திருமணம் நடக்கவில்லை. அவர் மூலமாக ஆண் குழந்தை ஒன்றிற்கும் தாயானார். அதன்பின் இருவரும் பிரிந்தனர். எமியின் ஆண் குழந்தைக்கு நான்கு வயதாகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஆங்கில நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வருகிறார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அந்தப் புதிய காதலருடன் "ஏடாகூடமான" முத்தப் புகைப்படங்களையும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். புது காதல் ஜோடிக்கு அவர்களுடைய நண்பர்கள் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!