
காதலர் தினத்தில் ஆதியின் பொய் பொய் பொய் ஆல்பம் வெளியீடு
ஆதியின் படங்கள் எப்படி இருந்தாலும் அவரின் தனி இசை ஆல்பங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கிறது. அதனால் அவர் தொடர்ந்து இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது காதலர் தினமான இன்று "பொய் பொய் பொய்" என்ற இசை ஆல்பத்தை காதலர் தின சிறப்பு ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாகவும் ஆதி அறிவித்துள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!