
நகைக்கடை கொள்ளை பின்னணியில் உருவாகும் துச்சாதனன்
படம் பற்றி இயக்குனர் தளபதி கூறியதாவது: பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன்தான். அப்படிப்பட்ட சுயநலவாதியின் கதைதான் இந்த துச்சாதனன். ஒரு நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது. அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க காவல்துறை களம் இறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களை, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லும் படம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!