
ஓடிடியில் வந்த பிறகும் தியேட்டர்களில் ஓடும் துணிவு
"துணிவு" படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் டிரென்டிங்கில் முதலிரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. "துணிவு" ஹிந்தி, "துணிவு" தமிழ் இரண்டு படங்களும் நெட்பிளிக்ஸ்ல் இந்த வார டாப் 10 படங்களில் முதலிரண்டு இடங்களில் உள்ளது.
ஓடிடியில் வெளியானாலும் தமிழகத்தில் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே 28 தியேட்டர்களில் ஓடுகிறது. இன்றைய பல காட்சிகள் ஹவுஸ்புல்லாகவும் ஆகி ஆச்சரியப்படுத்தி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!