
ஏகே 62 யார் தான் இயக்குனர் ?
ஒரு பக்கம் பல முன்னணி இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும், இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி சொன்ன கதையை ஓகே சொல்லிவிட்டார்கள் என்றும் தகவல். நேற்று இரவு புதிதாக அந்த இயக்குனர்கள் போட்டியில் வெங்கட் பிரபுவின் பெயரும் அடிபட ஆரம்பித்துவிட்டது.
விஜய் நடித்த "வாரிசு", அஜித் நடித்த "துணிவு" இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தன. விஜய்யின் அடுத்த படமாக "லியோ" படத்தை அறிவித்துவிட்டு படப்பிடிப்புக்கும் சென்றுவிட்டார்கள். ஆனால், அஜித்தின் அடுத்த படத்திற்கான இயக்குனர் யார் என்பதன் பேச்சுவார்த்தை இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது. இது அஜித் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் யார் என அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள், படத்தை அறிவியுங்கள் என்று அஜித் ரசிகர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!