
விக்ரமின் ‛துருவ நட்சத்திரம் விரைவில் திரையில் மின்னப் போகிறது
விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை மீண்டும் படமாக்கி இருக்கிறார் கவுதம் மேனன். இதோடு இப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஓரிரு பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும், அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள்.
ஏற்கனவே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதால், தற்போது படமாக்கப்பட்ட காட்சிகளின் இறுதிகட்ட பணிகளும் நடத்தப்பட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நீண்டநாள் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரையில் விரைவில் மின்னப் போகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!