
வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம்
இந்த நேரத்தில் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்துள்ள ஜோஸ் கதாபாத்திரம் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் காஷ்மீருக்கு ஒரு கேஸ் சம்பந்தமாக போயிருந்தப்போ அவன் பழக்கமானான் என அமர் குறித்து வினோத் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. தற்போது விஜய்யின் லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூ-வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி லோகேஷ் கனகராஜ் படங்கள் குறித்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் விஜய்யின் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிற தொடங்கி இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!