
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு
அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். "கீதா கோவிந்தம்" படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பரசுராம் இணையும் புதிய படத்தைத் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதுதான் இந்த புதிய சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது.
"கீதா கோவிந்தம்" படத்தை அல்லு அர்ஜுனின் அப்பாவான அல்லு அரவிந்த் தெலுங்கில் வெளியிட்டிருந்தார். அப்படத்தின் இயக்குனரான பரசுராமிடம் படம் இயக்க பெரும் தொகை ஒன்றை அட்வான்ஸ் ஆகக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்குப் படம் பண்ணாமல் திடீரென தில் ராஜுக்கு படம் செய்வதுதான் சர்ச்சைக்குக் காரணம். இது குறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தார் அல்லு அரவிந்த். ஆனால், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்துவிட்டார். பேசித் தீர்த்துக் கொள்ள தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னதால் தற்போதைக்கு சர்ச்சை அடங்கியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!