
ஏகே 62 இந்த வாரம் அறிவிப்பு வருமா ?
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய்யின் 67வது படம் பற்றிய ஆரம்பக்கட்ட அப்டேட்டுகள் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தின. அது முடிந்த பின் அஜித் 62 பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என சொன்னார்கள்.
அதனால், இந்த வாரம் எகே 62 பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. விஜய்யின் "லியோ" பட அறிவிப்பை அதிரடியான டீசருடன் ஆரம்பித்தார்கள். ஆனால், "எகே 62" பற்றிய அறிவிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பத்திரிகைச் செய்தி அறிவிப்பாக மட்டுமே வெளியாகும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!