
கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா
2018ம் ஆண்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கோஸ்சேவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2021ல் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார் ஸ்ரேயா. 2001ம் ஆண்டு வெளிவந்த "இஷ்டம்" என்ற தெலுங்குப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரேயா கடந்த 22 வருடங்களாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவர் நடித்து "ஆர்ஆர்ஆர், தட்கா, த்ரிஷ்யம் 2" ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்து "கப்ஜா" என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான, கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிடுவார் ஸ்ரேயா. 40 வயதைத் தொட்ட பின்னும் அவர் இன்னமும் அதே இளமையுடன் இருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். சமீபத்தில் அவர் பதிவிட்ட சில கவர்ச்சிகரமான புகைப்படங்கள் பலரையும் வியக்க வைத்துள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!