
அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்!
மேலும் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் அட்லி மற்றும் பிரியாவின் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அது குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் அட்லி. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அட்லியின் குழந்தையை நேரில் சென்று பார்த்திருக்கிறார் ஷாருக்கான். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், அட்லியின் குழந்தையை நேரில் சென்று பார்த்தேன். மிகவும் அழகாகவும், இனிமையாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!