
பிரபல நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று (பிப்.,5) காலை காலமானார். நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நடிகர்கள் கவுண்டமணி, ரமேஷ் கண்ணா, செந்தில் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் இரங்கல்
கஜேந்திரனின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி: எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது. கலையுலகிற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன். அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல். எனத் தெரிவித்துள்ளார். மேலும், சாலிகிராமத்தில் உள்ள கஜேந்திரனின் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!