
25வது நாளில் வாரிசு, துணிவு
"வாரிசு" படம் 250 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. "துணிவு" படம் 200 கோடியைக் கடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. "வாரிசு" படத்துடன் ஒப்பிடும் போது "துணிவு" படம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று சில புதிய படங்கள் வெளிவந்திருந்தாலும் "வாரிசு, துணிவு" ஆகிய இரண்டு படங்களும் இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் "துணிவு" படத்தின் ஓட்டம் முடிவடையும். அப்படத்தை ஓடிடியில் பிப்ரவரி 8ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். "வாரிசு" படம் ஓடிடியில் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!