
விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்!
அந்த வகையில் விஜய் 67வது படத்தில் அவருடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கே ஜி எப்- 2 படத்தில் வில்லனாக நடித்து பெரிய அளவில் மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் 67வது படத்திலும் முக்கிய வில்லனாக நடிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு நடித்த கே ஜி எப்- 2 படத்தில் நடிப்பதற்கும் இதே 10 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!