
விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள்
இந்த நிகழ்வில் நட்சத்திரமாக நடிக்கும் சிறுமி பங்கேற்று அனைவரையும் கவனம் ஈர்த்தார். இந்த குழந்தை யார் என சோசியல் மீடியாவில் தேடல் ஓடிக்கொண்டிருக்க, தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் அர்ஜுனன் என்பவரின் மகளான இயல் என்பவர்தான் இந்த சிறுமி என தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தனது மகள் இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் அர்ஜுனன், அதுமட்டுமல்ல இவர் தனது மகன் மற்றும் மகள் இயல் ஆகியோருடன் இணைந்து இன்ஸ்டாவில் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்த சிறுமி நடிப்புக்கு ஒன்றும் புதியவரல்ல என்பதால் நிச்சயம் இந்த படத்தின் மூலம் இந்த ரசிகர்களை இன்னும் அதிகமாக கவர்வார் என எதிர்பார்க்கலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!